என்ன வளம் இல்லை புதுவை மாநிலத்தில்? ஏன் கையேந்த வேண்டும்???

புதுச்சேரி ஒரு சின்ன சிறிய மாநிலம் வெறும் 490 சதுர கி. மீ. பரப்பளவு கொண்டது. மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே.

புதுச்சேரி நான்கு பகுதிகளை கொண்டது நல்ல நீர் வளம் மிக்க பகுதி.
புதுச்சேரியில், ஐந்து ஆறுகளும், காரைக்காலில் ஏழு ஆறுகளும், ஏனாமில் இரண்டு ஆறுகளும். மாஹியில் ஒரு ஆறும் ஓடுகின்றன.

இவற்றில் படுகை அணைகளை கட்டி கடல் நீரில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தாலே போதும்.

இது தவிர புதுச்சேரியில் சுமார் 84 ஏரிகள் உள்ளன. இதில் முக்கிய மான ஐந்து ஏரிகள்.

  • பாகூர் ஏரி
  • ஊசூட்டேரி
  • வேல்ராம் பேட்டை ஏரி
  • கனகன் ஏரி
  • நல்லம்மாள் ஏரி ஆகியன முக்கியமானவை..

பாகூர் ஏரி, சுமார் 1740 ஏக்கர் பரப்பளவும்  3.3 மீ ஆழமும்  உள்ளது. ஆனால், தற்போது மிகவும் குறைந்துள்ளதொடு, நிறைய இடங்கள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது.

உசுட்டேரி, இதன் பரப்பளவு சுமார் 800 ஏக்கர். இதில் தமிழ் நாடுக்கு சுமார் 410 ஏக்கர் சொந்தம்…
ஆசியாவிலேயே சேற்றுப் பிடிப்பு பகுதியாக இது கருதப்படுகிறது. மேலும், புதுச்சேரி குடிநீர் தேவையை பெருமளவு தீர்த்து வைக்கிறது…

கணகன் ஏரி, தூர்வாரப்படாமல் கவனிக்க படாமல் இருந்தது. சில சமூக அமைப்புகளின் விழிப்புணர்வால் அது காப்பாற்றப் பட்டாலும் அதன் நிலை இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது.

வேல்ராம் பேட்டை ஏரி, இதுவும் சமூக அமைப்புகளின் உதவியால் காப்பாற்றப் பட்டது. இருப்பினும் அரசு போதிய அக்கறை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை…

நல்லம்மாள் ஏரி, இந்த ஏரி காரைக்காலில் உள்ளது… செயற்கையாக உருவாக்கப்பட்டது.

  • நீர் நிலை பிடிப்புகள் பாதுகாக்கப்பட
  • எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை போக்கிட
  • நிலத்தடி நீரை பாதுகாத்திட இருப்பதை ஒழுங்காக பாதுகாத்திட வேண்டும்…

தூர்வாரி ஆழப் படுத்தி, படுகை அணைகளை கட்டி, ஆக்ரமிப்பு களை அகற்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கு மானால், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன்,  விவசாய உற்பத்தி தன்னிறைவு அடைவதுடன், கால்நடை காய்கறி உற்பத்தி, பால் உற்பத்தி,  ஆகியவற்றில் தன்னிறைவு அடைவதோடு, விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். இவர்கள் நகர்ப்புறத்தை நோக்கி வேலை வாய்ப்பு தேடி செல்லும் நிலை ஏற்படாது.

புதுச்சேரியில்.

  • மூன்று பஞ்சாலைகள்..
  • ஐந்து நூற்பாலைகள்..
  • இரண்டு சர்க்கரை ஆலைகள்..
  • ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்பேட்டைகள்..
  • பாரம்பரிய தொழில்களான கைத்தறி நெசவுத் தொழில்..
  • மீன் பிடி தொழில்.

இவற்றை புனரமைத்து.. ஒரு லட்சம் இளைஞருக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு ஒதுக்கிய இடத்தில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தினால், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம்.இதனால் வெளி மாநிலத்தில் அதிக விலை கொடுத்து வாங்க தேவையில்லை.

மதுபானக் கடைகளும் உல்லாச விடுதிகளும் பெருகி புதுச்சேரி மாநிலத்தை குப்பைக்காடாக்கி வருவதை தடுத்து, அதை எல்லாம் குறைத்து, சுற்றுலா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவாயை பெருக்கும் வகையிலும், புதுச்சேரி மக்களுக்கு பாதிப்பு வராத வகையிலும் சட்டம் ஒழுங்கு கெடாத வகையிலும், புதுச்சேரியை புதுச்சேரி மக்களை அமைதியாக நிம்மதியாக வாழவைக்க அரசால் முடியாதா???

மனசு இருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு…. நேர்மை தலைமை தாங்குமானால்… நீதி அங்கு நிச்சயம் கிடைக்கும்…

இது ஆம் ஆத்மி கட்சியின் மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு.

புதுச்சேரியில் இவ்வளவு வளம் இருந்தும் ஏன் அவல நிலை…

இதில் அவசியம் குறிப்பிட வேண்டியது… பாகூர் ஏரி பற்றியது… இதன் வரலாறு பற்றி படிக்கும் போது.. ருசிகரமான தகவல்…

சோழர் காலத்தில்.. மூல நாதர் கோவிலில் தரிசனம் செய்ய வந்த சோழ மன்னன்… பாகூரில் மக்கள் படும் துயர் கண்டு… ஏரியை ஏற்படுத்த… கோயிலில் பணிபுரிந்த இரண்டு தேவதாசிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்… பாங்காரி.. சிங்காரி.. இருவரும் சகோதரிகள்…
பாங்காரி.. பெண்ணையாற்றில் இருந்து 13 கிமீ தொலைவிற்கு வாய்க்கால் அமைக்கும் பொறுப்பை ஏற்றார்… சிங்காரி.. பாகூர் ஏரி ஆழப் படுத்தும் பொறுப்பை ஏற்றார்…
இவ்வாறு அமைந்தது தான் பாகூர் ஏரி…
வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவரும்.. ஒரு அளவு குழி தோண்ட வேண்டும்…
அபராதத் திற்கு கூட இந்த குழி தோண்டும் தண்டனையை கொடுத்தனர்… அப்படி உருவாக்க பட்டது தான் இந்த பாகூர் ஏரி…
இன்று ஆழம் குறைந்து ஆக்ரமிப்பு அதிகமாக தூர்வாரப்படாமல் உள்ளது வேதனைக்குரியது…

இவ்வளவு வளம் புதுச்சேரியில் இருந்தும் புதுச்சேரியின் நிலை ஏன் இப்படி…

இப்போது கூட இந்த ஐந்து ஆண்டுகளில்.. தொலை நோக்கு பார்வையோடு திட்டங்களை வகுத்தால்.. புதுச்சேரி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆவது உறுதி…

இந்த அரசு செய்யுமா? ஆட்சியாளர்கள் செய்வார்களா? மக்கள் இது குறித்து கேட்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »